'எல்லா கண்ணும் உங்க மேலதான்'.. 'மைதானத்தையே நெகிழ வைத்த' அம்மாவின் செயல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 27, 2019 11:10 AM

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்களின் அகக்கண்கள்தான் எல்லாவற்றையும் பார்ப்பதற்கு உதவக் கூடியன. காதால் கேட்பவற்றைப் அவர்கள் தங்கள் உலகத்திற்குள் சிருஷ்டிப்படுத்திக் கொண்டு காண்பதுண்டு.

mother explains her visually impaired son in WC2019

இப்படி உள்ளுணர்வு மூலமாகவே இந்த உலகின் அரிய, பெரிய, அழகிய, இனிய, கொடிய பலவற்றையும் காணும் பார்வை மாற்றுத் திறனாளிகளின் இன்னொரு கண் ஊக்கம். அந்த ஊக்கத்தையும், அவர்கள் கற்பனை செய்துகொள்ளத்தக்க மொழியையும் தரும் வகையில் பேசுபவர்கள்தான் அவர்களின் பெஸ்ட் கம்பெனியன்ஸ்.

அப்படித்தான் கிரவுண்டில் பார்வையாளரின் இடத்தில் அமர்ந்திருந்த, பார்வை மாற்றுத் திறனாளி ரசிகரான சிறுவன் ஒருவனுக்கு, அவனுடைய அம்மா, கிரவுண்டில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் மேட்சின் ஒவ்வொரு நொடியையும் வார்த்தையாக, தன் மகனுக்கு கடத்துகிறாள். இந்த நிகழ்வு பலரையும் நெகிழ வைத்துள்ளது.

நேற்றைய தினம், பிர்மிங்ஹாம் மைதானத்தில் நியூஸிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போட்டியில் பாகிஸ்தான் நியூஸிலாந்தை 6  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது, தனது பார்வை மாற்றுத்திறனுள்ள மகனுக்கு தாயொருவர் மேட்சின் ஒவ்வொரு கணத்தையும் விளக்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #PAKVNZ #INSPIRING