‘காவி நிற ஜெர்சியா, கூடவே கூடாது’... 'இந்திய அணிக்கு வலுக்கும் எதிர்ப்பு'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 27, 2019 11:25 AM
உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி காவி நிற ஜெர்சி அணிந்து விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை தொடரில், மொத்தம் 10 அணிகள் விளையாடுகிறது. இந்தத் தொடரில், ஒரே மாதிரியான நிறங்களைக் கொண்ட ஜெர்ஸி உடன் இரு அணிகள் விளையாடுவதை தவிர்க்கும் வகையில், புதிய திட்டத்தை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஒரே நிறத்தைக் கொண்ட இரு அணிகள் விளையாடும்போது, அதில் ஒரு அணி வேறு நிறம் கொண்ட ஜெர்ஸியை அணிய வேண்டும்.
இதில் இங்கிலாந்தில் போட்டியை நடத்துவதால், அந்நாட்டு அணிக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அந்த அணி நீல நிற ஜெர்ஸியையே பயன்படுத்தி வருகிறது. அதேபோல் பாகிஸ்தான் அணியின் பச்சைநிற ஜெர்ஸிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 30-ம் தேதி, இங்கிலாந்துடன் இந்திய அணி மோத உள்ளது. அதில் இரு அணிகளும் நீல நிற கொண்ட ஜெர்ஸி என்பதால், இந்திய அணி காவி நிற ஜெர்சி அணிந்து பங்கேற்க உள்ளது.
இதற்கு காங்கிரஸ், சாமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ. அரசு நாட்டையே, காவி மயமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே ஐசிசி தரப்பில், இந்திய அணிக்கு பல வண்ணம் கொண்ட ஜெர்ஸிக்களை கொடுத்ததாகவும், ஆனால் இந்திய அணியின் பழைய டி-20 ஜெர்ஸியில் இடம் பெற்ற, காவி நிற ஜெர்ஸியே தேர்வு செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
