உலகக்கோப்பையில் 27 வருட சாதனையை தக்கவைக்குமா இந்திய அணி? காத்திருக்கும் மிகப்பெரிய சவால்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 27, 2019 04:57 PM
உலகக்கோப்பையில் இந்திய அணியின் 27 ஆண்டுகால சாதனையை முறியடிக்க மேற்கிந்திய தீவுகள் அணி முனைப்பு காட்டி வருகிறது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று(27.06.2019) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் விளையாடி வருகிறது. இதனால் புள்ளிப்பட்டியலில் 9 புள்ளிகளுடன் 3 -வது இடத்தில் இந்தியா உள்ளது. இன்றைக்கு நடைபெறும் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தும் பட்சத்தில் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுவிடும்.
ஆனால் ஒருவேளை இந்திய அணி தோல்வியை தழுவினால், இந்தியாவின் 27 ஆண்டுகால சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி முறியடித்துவிடும். கடந்த 1992 -ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில்தான் இந்தியாவை மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியுள்ளது. அதனை அடுத்து நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற மேற்கிந்திய தீவுகள் அணி முனைப்பு காட்டி வருகிறது.