‘தல’ தோனியின் திட்டம் இதுதான்’... ‘வெளியான புதுத் தகவல்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Sep 23, 2019 01:04 PM

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங், தன்னுடைய விடுப்பை மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MS Dhoni unavailable for selection until November

உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் ராணுவத்தில் 2 மாதங்கள் பயிற்சி முடித்த தோனி, இந்த வருடம் நவம்பர் மாதம் வரை அணியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகக் கோப்பை தொடருக்கு முன்பிலிருந்தே தோனியின் ஓய்வு குறித்து, பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்பின்னரும் தோனியின் ஓய்வு குறித்து புதிது புதிதாக பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. ஆனால் இதுகுறித்தெல்லாம், எந்தவித கருத்தையும் தெரிவிக்காத தோனி, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்காமல், 2 மாத விடுப்பில், ராணுவப் பயிற்சி மேற்கொண்டார். ராணுவப் பயிற்சி முடிந்து இடைவேளையில் இருக்கும் தோனி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரானத் தொடரிலும் பங்கேற்வில்லை.

தற்போது இந்த இடைவேளையை நவம்பர் மாதம் வரை தோனி நீடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் ஹசாரே கோப்பை மற்றும் வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடரிலும், அவர் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மேற்கிந்திய தீவுகள் தொடரில் தோனி விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன் விராட் கோலி பதிவு செய்த ஒரு புகைப்படத்தால் தோனி ஓய்வு பெற உள்ளார் என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

Tags : #MSDHONI #SPORTS