‘உங்கள் நேர்மை சோதிக்கப்பட்டது.. அதில் தோற்றுவிட்டீர்கள்..’ இந்திய அணியை மறைமுகமாகச் சாடியுள்ள முன்னாள் வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 01, 2019 05:34 PM

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.

Waqar Younis slammed Indian team for losing to England

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வெற்றி நடைபோட்டு வந்த இந்திய அணி இங்கிலாந்திடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் தோனியும், ஜாதவும் விளையாடிய விதம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்தால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் போயிருக்கும். அதேசமயம் அப்படி இங்கிலாந்து வெளியேறியிருந்தால் பாகிஸ்தான் அணி அடுத்துவரும் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் இந்தியா தோல்வி குறித்து கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுவே உங்களைத் தீர்மானிக்கும். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்கிறதோ இல்லையோ அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு விஷயம் உறுதியானது. சில சாம்பியன்களின் உண்மையான கிரிக்கெட் நேர்மை, பெருந்தன்மை சோதிக்கப்பட்டது. அதில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

இந்தியா குறித்த இவருடைய மறைமுகமான விமர்சனத்துக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பாகிஸ்தானை அரையிறுதிக்குள் வரவிடாமல் தடுக்க இந்தியா வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பாசித் அலி, சிக்கந்தர் பாகத் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSENG #TEAMINDIA #WAQARYOUNIS