'பரபரப்பான' சூழலில் விஜய் சங்கருக்கு பதில்.. முதல் உலகக் கோப்பை போட்டியை சந்திக்கும் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 30, 2019 03:34 PM

தமிழக வீரர் விஜய் சங்கருக்கு பதிலாக, ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிராக மோதும் உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Rishab Pant in replacement for Vijay Shankar in ENGvIND CWC19

கோலி தலைமையிலான இந்திய அணியும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதிக்கொள்ளும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, லண்டனின் பிர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் ஜூன் 30, 2019 சனிக்கிழமை நிகழ்கிறது.

இதுவரை விளையாண்ட 6 போட்டிகளில் இந்திய அணி, 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துடனான இந்தப் போட்டியில் வெற்றியடைந்தால், ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்ததாக, அரையிறுதிக்குத் தகுதிபெறும் 2வது அணியாக இந்தியா இருக்கும்.

இந்த பரபரப்பான சூழலில், தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதில் ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் விளையாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #TEAMINDIA #INDVENG #ENGVIND