‘இந்திய அணிக்கு வந்த சோதனை’.. பீல்டிங் செய்த போது முக்கிய வீரருக்கு காயம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 30, 2019 05:54 PM

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்யும் போது இந்திய வீரருக்கு காயம் ஏற்பட்டதால் பேட்டிங் செய்ய வருவது சந்தேகமாகியுள்ளது.

World Cup 2019: KL Rahul minor injury while diving

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்று இன்று(30.06.2019) பிர்மின்காம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு மற்றும் நீலம் கலந்த புதிய ஜெர்சியுடன் களமிறங்கியுள்ளனர். மேலும் இந்திய அணியில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பண்ட்டிற்கு இது முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இவர்கள் இருவரது விக்கெட்டுகளையும் கைப்பற்ற இந்திய அணியின் பந்துவீச்சளார்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதில் ஜானி பேர்ஸ்டோ சதமும்(111), ஜேசன் ராய் அரைசதமும்(66) அடித்து அசத்தினர். மேலும் இப்போட்டியில் பீல்டிங் செய்யும் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் ராகுலுக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்ய வந்துள்ளார். இதனால் பேட்டிங் செய்ய ராகுல் வருவது சந்தேகமாகியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #BCCI #KLRAHUL #TEAMINDIA #INDVENG #INJURY