இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் திடீர் மரணம்..! சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 30, 2019 04:00 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகேஷ் சுக்லா உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகேஷ் சுக்லா, முதல் தர டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆதிக்கம் செலுத்திய வீரராக திகழ்ந்தவர். இவர் டெல்லி மற்றும் பீகார் ஆகிய இரு அணிகளின் சார்பாக விளையாடியுள்ளார்.
இவர் கடந்த 1981 -ம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் 9- வது வீரராக களமிறங்கி ராஜேஷ் பீட்டர் என்ற வீரருடன் இணைந்து 118 ரன்களை பார்டனர்ஷிப் மூலம் அடித்தனர். இதன்விளைவாக அந்த ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சார்பாக விளையாட ராகேஷ் சுக்லா தேர்வாகி இருந்தார்.
மொத்தமாக 121 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள ராகேஷ் சுக்லா 3798 ரன்களும், 295 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் டெல்லியில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 71 வயதான ராஜேஷ் சுக்லா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது இறப்பிற்கு டெல்லி கிரிக்கெட் வாரியம் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளது.
