'கிரிக்கெட்டின் கடவுளை சந்தித்த பின்'.. பிசிசிஐ-யின் ட்வீட் .. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Jul 01, 2019 11:03 AM
கூகுளின் முதன்மை செயல் அதிகாரியும், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துக் கொண்ட தருணம் புகைப்படமாக வலம் வந்து இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
உலகக் கோப்பை போட்டியின், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் தோல்வியை கண்டுள்ளது. இந்தத் தோல்வியை பாடமாகக் கற்றுக்கொண்டு ஒரு தொழில்முறை வீரர்களாக அடுத்தடுத்த ஆட்டத்தில் திருத்திக் கொள்வோம் என்று கோலி கூறியுள்ளார்.
முன்னதாக கூகுளின் முதன்மை செயல் அலுவலரும், சென்னையைச் சேர்ந்த தமிழருமான சுந்தர் பிச்சை பேசும்போது உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளுக்கு தகுதியான அணிகளாக இந்தியா- இங்கிலாந்து அணிகளும், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தனக்குத் தோன்றுகிறது என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டியின் போது, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், சுந்தர் பிச்சையும் சந்தித்துக்கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. தீவிர கிரிக்கெட் ரசிகரான சுந்தர் பிச்சை, அவ்வப்போது கிரிக்கெட் விளையாண்ட அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
Google CEO @sundarpichai along with the Master Blaster @sachin_rt at the game today 🤝🤝 pic.twitter.com/jKZKFgelUF
— BCCI (@BCCI) June 30, 2019