’டீமுக்கு என்ன பண்ணனும்னு.. அவருக்குத் தெரியும்.. நாங்க நம்புறோம் அவர’ .. கோலி அதிரடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 30, 2019 03:08 PM

தோனியின் மீது நம்பிக்கை உள்ளதாகவும், வீரர்கள் அவரை நம்புவதாகவும் கோலி தெரிவித்துள்ளது, தோனியின் மீதான விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கருத்தாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

He Knows What to do, we trust him, Kohli over Dhoni issue

தோனியின் ஸ்லோ பேட்டிங் திருப்திகரமாக இல்லை என அண்மையில் சச்சின் டெண்டுல்கர் கூறியதை அடுத்து, சச்சினின் விமர்சனம் விவாதப் பொருளாகவே மாறியது. பலரும் இணையத்தில் வெவ்வேறு விதமான எதிர்ப்பு மற்றும் ஆதரவுக் கருத்துக்களையும், சிலர் நடுநிலையான கருத்துக்களையும் கூறிவந்தனர்.

பெர்ஃபார்மன்ஸ் ரீதியாகவும், தோனியின் ஆட்டம் எப்படி என விவாதம் எழுந்தது. அந்த நிலையில், பும்ரா உள்ளிட்ட சக வீரர்கள் தோனியின் புரிந்தல் நிறைந்த ஆட்டம்தான், கடைசி நேரத்தில் ஆட்டத்தைக் காப்பாற்ற உதவுகிறது என்றும், அதற்காக அவர் பிரஷர் எடுத்துக்கொள்கிறார் என்றும் கூறினர்.

அதன் பின்னர், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா மோதிய ஆட்டத்தில் தோனி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார். இந்நிலையில் இதுபற்றி பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,  ‘இந்திய அணிக்கு செய்ய வேண்டியவை என்ன என்பது தோனிக்குத் தெரியும்’ என்றும் ‘நாங்கள் எல்லாரும் தோனியை நம்புகிறோம்’ என்றும் கூறியுள்ளார்.