இறுதிப் போட்டி குறித்து ட்வீட் செய்த பிரபல முன்னாள் வீரர்’... ‘பதிலளித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 17, 2019 08:42 PM
உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பாக அதிரடி வீரர் சேவாக் மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து மோதிய இறுதிப்போட்டியில், இங்கிலாந்து வெற்றிப்பெற்றது. பவுண்டரிகளின் அடிப்படையில் அளிக்கப்பட்ட விருது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து சேவாக் கூறுகையில், ‘நியூசிலாந்துக்கு ஏற்கனவே இந்திய ரசிகர்கள் உள்ளநிலையில், இன்று முதல் அதிகரித்துள்ளனர். இதற்கெல்லாம் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் முக்கிய காரணம். இத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும், அவரது புன்னகையும், அமைதியும் பிரமிப்பாக உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி என்பதே இல்லை’ என்று கேன் வில்லியம்சின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அந்த ட்வீட்டை, ரீட்வீட் செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைகேல் வான், ‘கேன் வில்லியம்சன் தலைசிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த விவகாரத்தில், வீரேந்திர சேவாக்கின் கருத்தை முழுமனதுடன் ஏற்கிறேன். ஆனால், ஒரு விஷயம்... போட்டியின் முடிவில் ‘டை’ ஆகவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இப்போட்டியை ‘டை’ என அறிவித்து கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வரும் நிலையில், இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றுவிட்டது என்பது போன்று மைக்கேல் வானின் கருத்து பிரதிபலித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
New Zealand had many fans in India and today they have won many more, by their calmness and spirit.
Kane Williamson , smiling after the tie. Beautiful to see #CWC19Final pic.twitter.com/tW9cecqAGh
— Virender Sehwag (@virendersehwag) July 14, 2019
I agree Viru .. Great ambassador for the game .. But 1 thing .. It wasn’t a tie in the end !! https://t.co/YzKrFx0BmR
— Michael Vaughan (@MichaelVaughan) July 15, 2019