'நீங்க ரெண்டு பேரும்'...'கொஞ்சம் 'ரெஸ்ட்' எடுங்க' ... பிசிசிஐ எடுத்திருக்கும் முடிவு !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 24, 2019 09:53 AM

உலகக்கோப்பை தொடருக்கு பின்பு, மேற்கிந்திய தீவுகள் அணியோடு இந்திய அணி மோதவுள்ள போட்டியில், விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Virat Kohli, Jasprit Bumrah are set to be rested for the limited over

தற்போது உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில்,அதன் பின்பு இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியோடு 3 ஒரு நாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் இந்த போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டிகள்,சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றாக கணக்கிடப்படும் என்பதால் அந்த போட்டிகளில் இருவரும் இணைவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Tags : #VIRATKOHLI #CRICKET #BCCI #JASPRIT BUMRAH #WEST INDIES