'தல போல வருமா?'.. ஏன்னா கேட்ட கேள்வி அப்படி.. பிசிசிஐ-க்கு சிஎஸ்கே-வின் மரண மாஸ் பதில்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 20, 2019 10:43 AM

இந்திய வீரர்களின் ஹேர் ஸ்டைல்ஸ் பற்றி பிசிசிஐ கேட்ட கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிரடியாக அளித்துள்ள பதில் தமிழ்நாட்டு ரசிகர்களையும் தோனி ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

CSK\'s mass answer for BCCIs Question,\'Who\'s haircut is the coolest?\'

ஐசிசியின் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாண்டு வருவதோடு, பெட்டரான ஸ்கோரிலும், நல்ல ரன் ரேட்டிலும் உள்ள நிலையில், தாய்க் கடமையாக இந்திய வீரர்களை அனுப்பிவிட்டு, காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், அவ்வப்போது நடப்பு உலகக் கோப்பையை போட்டியை கவனித்தும், இந்திய வீரர்களையும் பாராட்டியும் ட்வீட் பதிவிட்டு வருகிறது.

இடையிடையே நடப்பு மேட்சுக்கு பொருத்தமான மலரும் பல பழைய நினைவுகளையும் நியாபகப்படுத்தும் வகையிலும், தகவல்களைப் பகிர்ந்து வருகிறது.  இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா,  தீபக் சஹால், விராட் கோலி மற்று எம்.எஸ்.தோனி உள்ளிட்டோரின் புகைப்படங்களை கொல்லோஜ் செய்து பதிவிட்டு, ‘இவங்கள்ல யாரோட ஹேர் ஸ்டைல் மிகவும் கூலாக இருக்கிறது?’ என்கிற தொனியில் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பல்வேறு ரசிகர்கள், சந்தேகமே இல்ல, ‘தலதான்’ என்று கூறியுள்ளனர். சிலர், ‘ஒரே ஒரு கிங்தான்.. அது கிங் கோலிதான்’ என்று பதிவிட்டுள்ளனர். இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த ட்வீட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டில்,  ‘தல போல வருமா?’ என்று பதிக் அளித்துள்ளது. அவ்வளவுதான் தோனி ரசிகர்களும், தமிழ் கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்தில் மிதக்கின்றனர்.