‘மீண்டும் விளையாட வருகிறாரா யுவராஜ் சிங்?’.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 19, 2019 12:37 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீண்டும் விளையாடுவது தொடர்பாக பிசிசிஐக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனை மும்பையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கண்ணீருடன் தெரிவித்தார். இந்த முடிவை நீண்ட ஆலோசனைக்கு பிறகே எடுத்ததாக யுவராஜ் கூறினார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் விளையாடுவாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்நிலையில் டி20 போட்டிகளில் விளையாட அனுமதி வழங்க வேண்டும் என பிசிசிஐக்கு யுவராஜ் சிங் கடிதம் அனுப்பியுள்ளார். யுவராஜ் சிங் தனது ஓய்வு அறிவிப்பின் போது, ‘நான் டி20 போட்டிகளில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் நான் இல்லாததை நினைத்தால் எனக்கு மன அழுத்தமாக இருக்கும். அதனால் ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாட ஆசைப்படுகிறேன்’ என தெரிவித்திருந்தார்.
முன்னதாக இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி டி20 கிரிக்கெட்டில் விளையாட யுவராஜ் சிங் பிசிசிஐயிடம் அனுமதி கோரியிருந்தார். இந்த டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்களான ரஹானே மற்றும் அஸ்வின் போன்ற வீரர்கள் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
