'சொந்த நாட்டுக்கு திரும்பணுமா?'.. 'அப்ப சொல்ற மாதிரி செய்யுங்க'.. எச்சரித்த கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 18, 2019 03:01 PM

எஞ்சியிருக்கும் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால், பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்றும், அம்மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் தன் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ரஸ் அஹமது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

sarfraz ahmed harshly advises his team ICC World Cup 2019

இந்தியா பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் நடந்த உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது. இன்னும் 4 போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், இதுவரை பாகிஸ்தான் அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

7வது முறையாகவும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியுற்ற பாகிஸ்தான் இந்த ஆட்டத்தொடரின் 4 போட்டிகளிலும் தோல்வியுற்றதால், முன்னாள் வீரர் ஷோயப் அக்தர், ‘பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ரஸ் அஹமது ஒரு மூளையில்லாதவர்’ என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், இனி வரும் 4 போட்டிகளிலும் நல்ல ரன்களில் வென்றால் மட்டுமே, பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்பதால், ஒழுக்கமாக விளையாடவில்லை என்றால் நாட்டுக்குள் திரும்பிப் போக முடியாது; மக்கள் நம்மை விடமாட்டார்கள் என்றும் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருப்பதோடு, அப்படி மோசமாக விளையாண்டால், சொந்த நாட்டுக்குள் செல்ல வேண்டும் என்று முட்டாள் தனமாக நினைக்க கூடாது என்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ரஸ் அஹமது பேசியிருப்பதாக பிரபல பாகிஸ்தான் நியூஸ்.காம் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அவர் அவ்வாறு பேசும்போது, மூத்த வீரர்களும் பயிற்சியாளர்களும் குறுக்கிடாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை 23-ஆம் தேதி அன்று லாட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள தென்னாப்பிரிக்காவுடனான வாழ்வா சாவா போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #PAKISTAN #CRICKET