WATCH VIDEO: தம்பி நீயுமா?..'நொந்துபோன' தென் ஆப்பிரிக்க பவுலர்.. 'என்ஜாய்' பண்ணிய கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Oct 20, 2019 08:55 PM
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது.
6⃣6⃣0⃣1⃣6⃣0⃣6⃣0⃣6⃣out
UMESH YADAV vs SA pic.twitter.com/KWV0SlDsoU
— Yash (@i_m_yash__) October 20, 2019
இன்று தொடர்ந்த இந்த ஆட்டத்தில் ரோஹித் மீண்டும் ஒரு இரட்டை சதம் விளாச, ரஹானே சதம் அடித்தார். ஜடேஜா 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தநிலையில் கடைசி கட்டத்தில் இறங்கிய உமேஷ் யாதவ் விரைவில் அவுட் ஆகிவிடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க சந்தித்த 10 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட, 31 ரன்கள் குவித்து உமேஷ் ஆட்டமிழந்தார்.
Selfless leader. @imVkohli ❤
"One who is not jealous can become a leader"💯😍
Although he didn't play well, Whoever plays well, he can stand up and clap 😍❤#INDvSA 💥#RohitSharma 😍🔥👏#UmeshYadav 🔥🔥👏#ViratKohli ❤😘 pic.twitter.com/ye6L8XArGN
— ᴩᴏɴʀᴀᴊ (@goking2000) October 20, 2019
இதன் மூலம் டெஸ்ட்டின் ஒரு இன்னிங்ஸில் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளுமே சிக்ஸர் அடித்த 3வது வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் உமேஷ். இதேபோல் ஒரு இன்னிங்ஸில் பவுண்டரி அடிக்காமல் சிக்ஸ் மட்டுமே அடித்த முதல் வீரரும் இவரே. உமேஷ் 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக் ரேட் 310 வைத்திருந்தார். ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் இது என்பதால் இதிலும் ரெக்கார்டை பிரேக் செய்தார் உமேஷ்.
இவ்வாறு உமேஷ் பல்வேறு சாதனைகளை இந்த ஒரு போட்டியின் மூலம் நிகழ்த்தி உள்ளார். உமேஷின் ஆட்டத்தை ரசிகர்கள் மட்டுமின்றி கேப்டன் கோலியும் பார்த்து என்ஜாய் செய்து ரசித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் லைக்குகளைக் குவித்து வருகிறது.