‘அவசரப்பட்டு ரபாடா பண்ண ஒரு செயல்’ ‘சிரிச்சு கலாய்த்த கோலி’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Oct 11, 2019 04:59 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டியில் ரபாடாவை கிண்டல் செய்யும் விதாமாக விராட் கோலி செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் 108 ரன்களும், கேப்டன் விராட் கோலி 254 ரன்களும் எடுத்தனர். மேலும் ஆல்ரவுண்டர் ஜடேஜா 91 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க வீரர் மகாராஜ் வீசிய ஓவரில் விராட் கோலி அருகில் அடுத்துவிட்டு ரன் ஓடினார். அப்போது தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ரன் அவுட் எடுக்க முயற்சித்து ஸ்டெம்பை நோக்கி வீசினார். ஆனால் பந்து ஓவர் த்ரோவாக சென்று பவுண்ட்ரி சென்றது. இதனால் அந்த பந்தில் இந்திய அணி 5 ரன்கள் கிடைத்தது. அப்போது ரபாடாவை கிண்டல் செய்யும் விதமாக விராட் கோலி சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
— Mohit Das (@MohitDa29983755) October 10, 2019
