‘ப்ளீஸ் யாராவது ‘தல’தோனிக்கு ஹெல்ப் பண்ணுங்கப்பா’.. ஐஐடி மெட்ராஸ் செமஸ்டரில் சிஎஸ்கே குறித்து கேட்ட வைரல் கேள்வி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 07, 2019 12:42 AM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து ஐஐடி மெட்ராஸ் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

IIT Madras Question, What should Dhoni do if he wins the toss tomorrow

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அடுத்து நடைபெறும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பிடித்துள்ளது. இதுவரை விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடரிலும் ப்ளே ஆஃப் சென்ற அணி சாதனையை சென்னை படைத்துள்ளது.

இரண்டு ஆண்டு தடைக்குப் பின் கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய சென்னை அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதுவரை சென்னை அணி மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை அணியுடன் இன்று(07.05.2019) தகுதிசுற்று 1 ல் விளையாட உள்ளது.

இந்நிலையில் ஐஐடி மெட்ராஸ் கல்லூரியின் செமஸ்டர் வினாத்தாளில் ப்ளே ஆஃப்பில் சென்னை அணி விளையாடுவது குறித்து ஒரு கேள்வி இடம்பெற்றுள்ளது. இந்த வினாத்தாளின் புகைப்படத்தை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Tags : #IPL #IPL2019 #CSKVMI #PLAYOFFMODE #MSDHONI #IITMADRAS #WHISTLEPODU