‘ஸிவா குட்டிய கடத்தப் போறேன், ஜாக்கிரதைனு தோனிகிட்ட சொன்னேன்’.. வைரல் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 07, 2019 04:34 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சந்தித்து பேசியது என்ன என்பதை, தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ரீத்தி ஜிந்தா பகிர்ந்ததை அடுத்து, சுவாரஸ்யமான அந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

\'I may just kidnap Ziva\', Preity G Zinta Alerted MS Dhoni

கடந்த ஞாயிற்று கிழமை அன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதிய சென்னை அணி தோல்வியடைந்ததை அடுத்து, ஆட்ட முடிவில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா மைதானத்தில் சென்று தோனியை சந்தித்து பேசினார்.

அப்போது சென்னை அணி கேப்டன் தோனியுடன் தான் பேசியது என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ரீத்தி ஜிந்தா, தோனியுடன் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ட்வீட்டாக தற்போது பதிவிட்டுள்ளார். 

அதில், ‘என்னையும் சேர்த்து கூல் கேப்டனுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த சமயம் எனது உள்ளன்பு முழுவதும்  தோனியின் மகள் ஸிவா மீதாக மாறியுள்ளது. மேலும் அவரிடம் அவளை (ஸிவாவை) நான் கடத்தலாம் என்றிருப்பதாகக் கூறி, கவனமாக இருக்க அறிவுறித்தினேன்’ என்றி கூறியுள்ளார். 

Tags : #CSK #MSDHONI #ZIVADHONI #PREITYGZINTA