பரபரப்பான கடைசி ஓவர், பறந்த பேட், பும்ராவால் அவுட்டில் இருந்து தப்பிய ‘தல’ தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 07, 2019 10:33 PM

தோனி மற்றும் அம்பட்டி ராயுடுவின் நிதானமான ஆட்டத்தால் சென்னை அணி 131 ரன்களை எடுத்துள்ளது.

WATCH: MS Dhoni survives Jasprit Bumrah\'s final over scare

ஐபிஎல் டி20 தொடரின் லீக்கின் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தகுதிசுற்று 1 இன்று(07.05.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். 65 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, தோனி மற்றும் அம்பட்டி ராயுடு கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. இதில் அம்பட்டி ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.

இப்போட்டியின் பும்ரா வீசிய 19 -வது ஓவரின் முதல் பந்தில் தோனி கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் அது நோ பால் என கொடுக்கப்பட்டதால் தோனி அவுட்டில் இருந்து தப்பினார். ஆனாலும் அந்த ஓவரில் பும்ரா 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

Tags : #IPL #IPL2019 #MIVCSK #ANBUDEN #WHISTLEPODU #YELLOVE #QUALIFIER1 #MSDHONI