'அவுங்ககூட எல்லாம் கோலியை கம்பேர் பண்ணாதீங்க'... ''அடுத்த கேப்டன் யாருனு நாட்டிற்கே தெரியும்'... 'கவுதம் கம்பீர் அதிரடி'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | May 16, 2019 05:26 PM
'இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான், இது நாட்டிற்கே தெரியுமே' என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்டிலிந்து ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர், பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் இந்திய அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் தனது கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். கேப்டன் கோலிக்கும், கவுதம் கம்பீருக்கும் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்நிலையில் கேப்டன் கோலி குறித்து மீண்டும் சர்ச்சையான கருத்தை கம்பீர் தெரிவித்துள்ளார்.
'ஐ.பி.எல். தொடரில் நான்கு முறை கோப்பை வென்றுள்ள மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மூன்று முறை கோப்பை வென்றுள்ள சென்னை அணியின் கேப்டன் தோனியுடன், கோலியை ஒப்பிடக் கூடாது. விராட் கோலி இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என நேரடியாக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் கம்பீர். மேலும், ரோஹித் இப்போது கேப்டன்சியில் உச்சத்தில் இருக்கிறார். இது நாட்டுக்கே அது தெரியும் என நினைக்கிறேன்.
காரணம், அவர் நான்கு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐ.பி.எல். லீக் போட்டியில் அவர் தான் வெற்றிகரமான கேப்டன். ஆசிய கோப்பைக்கு கேப்டனாக இருந்து வென்று கொடுத்துள்ளார் ரோஹித். எனவே, விராட் கோலிக்கு அடுத்த கேப்டன் அவர் தான்' என்றார் கம்பீர்.