'தெனம் 200 கமெண்ட்டுங்க.. ட்விட்டரே கருகிடும் போல.. தோனி பத்தின அந்த ட்வீட்ட டெலிட் பண்றேன்.. ஆனா'.. கதறும் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 16, 2019 05:21 PM

ஐபிஎல் சீசன் 12 அண்மையில் நிகழ்ந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை அணியும் மோதிக்கொண்ட இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.

jimmy neesham deleted his tweet about dhoni runout, this is the reason

இந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி, ரன் அவுட் ஆகியதை அடுத்து நியூஸிலாந்து வீரர் நீஷம் ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார். குழப்பாக இருப்பதாகக் கருதப்பட்ட அந்த ரன்-அவுட் இன்னும் பெரும் சர்ச்சையாகவும் விவாதப் பொருளாகவும் இருந்து வரும் நிலையில், குழப்பம் இருக்கும்போது பேட்ஸ்மேனுக்கு சாதகமாக தீர்ப்பு இருந்திருக்கலாம் என்றும் பலர் தங்கள் தரப்பு வாதங்களை சமூக வலைதளங்களில் செய்துவருகின்றனர்.

அதே சூழலில், இங்கிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி ரன்-அவுட் ஆகும் அந்த புகைப்படத்தை பதிவிட்டு, தோனி மீது, தான் பெரும் மதிப்பு வைத்திருப்பதாகவும், அதே சமயம், இந்த புகைப்படத்தைப் பார்த்தும் அவர் அவுட் இல்லை என்று கூறுவது தனக்கு திகைப்பாக இருப்பதாகக் கூறியிருந்தார்.

இதற்கு தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களின் தரப்பில் இருண்டு பல்வேறு எதிர்ப்புக் கருத்துக்களும் காட்டமான ரி-ட்வீட்டுகளும் கிளம்பியதால், தோனியின் ரன்-அவுட் பற்றிய தனது ட்வீட்டை டெலிட் செய்த நீஷம் அதற்கான காரணங்களையும் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஆம், டெலிட் செய்ததற்கு தனது முடிவை மாற்றிக்கொண்டது காரணம் அல்ல என்றும், தினமும் தனது பக்கத்தில் 200 கமெண்ட்ஸ் வந்து குவிந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு வெறுப்பாவதாகவும், ஆனால் இவற்றை, தான் பொருட்படுத்துவதில்லை என்றும் கூறியிருப்பதோடு, தொடர்ந்து இவ்வாறு ட்வீட் செய்து யாரும் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் நீஷம் கூறியுள்ளார்.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #CSK #MUMBAI-INDIANS #RUNOUT #JIMMYNEESHAM