அடுத்தடுத்த சோதனையில் சிக்கி தவிக்கும் இந்திய அணி..! காயத்தால் மீண்டும் ஒரு முக்கிய வீரர் விலகல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 01, 2019 02:59 PM

இந்திய அணியின் இளம் வீரர் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Vijay Shankar ruled out of World Cup 2019

12 -வது சீசன் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 -ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியில் 2 -வது இடத்தில் இருந்து வருகிறது. தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த இந்திய அணி நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, வலைப்பயிற்சியில் பும்ரா வீசிய பந்து விஜய் சங்கர் மீது பலமாக தாக்கியது. இதனால் அப்போது பயிற்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனை அடுத்து நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் விளையாடவில்லை.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 4 -வது ஆர்டரில் களமிறங்கினார். இந்நிலையில் காயம் முழுமையாக குணமடையாததால் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் இவருக்கு பதிலாக விளையாட மய்னங் அகர்வால் அணியில் சேர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #BCCI #VIJAYSHANKAR #MAYANKAGARWAL #TEAMINDIA