‘உலகக் கோப்பையில் பரபரப்பு..’ சரமாரியாகத் தாக்கிக் கொண்ட இரு நாட்டு ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 30, 2019 12:24 AM

உலகக் கோப்பையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரண்டு நாட்டு ரசிகர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PAK vs AFG Fans evicted from stands after clashes at Headingly

இந்தப் போட்டியின் நடுவே பலோசிஸ்தான் குறித்து வானில் பலூன் ஒன்று பறக்க விடப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த இரு நாட்டு ரசிகர்களும் மைதானத்திலேயே சண்டையிட்டுக்கொண்டுள்ளனர். ஆட்டத்தின் நடுவே "justice for balochistan" என்று எழுதப்பட்ட ராட்சத பலூன் விமானம் மூலம் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த இருநாட்டு ரசிகர்களும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனால் அந்த மைதானத்தைச் சுற்றி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மைதானத்துக்கு வெளியே கூட்டம் கூடியதால் பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்துள்ளனர்.  இந்த தனியார் விமானம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மேலும் அந்த விமானம் அனுமதி வாங்காமல் அங்கு பறந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #PAKVSAFG