'தமிழில் TIPS கொடுத்த தினேஷ் கார்த்திக்'... 'அப்படியே FOLLOW பண்ண வருண்'... 'தோனி விக்கெட்டை KKR வீழ்த்தியது இப்படித்தான்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் கடைசியில் அதிரடி திருப்பமாக கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.
![Video Dinesh Karthiks Tips In Tamil helps Varun To Take Dhonis Wicket Video Dinesh Karthiks Tips In Tamil helps Varun To Take Dhonis Wicket](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/video-dinesh-karthiks-tips-in-tamil-helps-varun-to-take-dhonis-wicket.jpg)
நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 10 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் விளையாடிய சிஎஸ்கே அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் திட்டங்கள் அந்த அணியின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது. அதிலும் குறிப்பாக தோனியின் விக்கெட்டை எடுக்க பவுலர் வருணுக்கு தினேஷ் கார்த்திக் கொடுத்த டிப்ஸ் பெரிதும் உதவியுள்ளது.
மிஸ்டரி ஸ்பின் பவுலர் என அழைக்கப்படும் வருண் சக்ரவர்த்தி நேற்று ஆட்டத்தின் போக்கையே மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்த நிலையில், போட்டியின்போது கீப்பிங் செய்து கொண்டு இருந்த தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கும் வருணுக்கு தமிழில் வழிகாட்டிக்கொண்டு இருந்தது மைக்கில் பதிவாகியுள்ளது. மச்சி இப்படி போடு, ஸ்லோ பால் போடாத என தோனி பேட்டிங் செய்த போது ஒவ்வொரு பந்துக்கும் தினேஷ் கார்த்திக் சொல்லிக்கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில்தான் 17வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை ஸ்டம்ப்பிற்கு வெளியே போடும்படி தினேஷ் கார்த்திக் வருணிடம் கூறியுள்ளார். அதில் இரண்டாவது பாலில் தோனி பவுண்டரி அடிக்க, மூன்றாவது பந்தை சரியாக ஸ்டம்பை நோக்கி போடு என அவர் கூறியுள்ளார். அதற்கு வருண் சந்தேகத்தில் மீண்டும் கேட்க தினேஷ் கார்த்திக், பயப்படாம போடு, அப்படியே போடு எனக் கூற, சரியாக வருண் அவர் சொன்னது போலவே பவுலிங் செய்து தோனியை ஆட்டமிழக்க செய்துள்ளார்.
VIDEO LINK : https://www.iplt20.com/video/213862/chakravarthy-s-perfect-comeback-to-msd
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)