‘ரன் எடுக்கலனா கூட பரவாயில்லை’.. ஆனா ‘அத’ மட்டும் எங்களால மன்னிக்கவே முடியாது.. ‘ரவுண்டு’ கட்டி அடிக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் கேதர் ஜாதவை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தும், கிண்டல் செய்து மீம்ஸ் பதிவிட்டும் வருகின்றனர்.

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று (07.10.2020) அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் ராகுல் திருப்பாதி 81 ரன்களை எடுத்தார்.
இந்தநிலையில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் 50 ரன்களும், அடுத்து வந்த அம்பட்டி ராயுடு 30 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து வந்த கேப்டன் தோனி 11 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து சாம் குர்ரனும் 17 ரன்களில் அவுட்டாக, 129 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தது. இதனால் 17 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்னை அணி சென்றது.
Let's at least have a good laugh at Jadhav's expense 😂😂🤣 pic.twitter.com/BKMRRNFqyL
— Haricharan Pudipeddi (@pudiharicharan) October 7, 2020
Master Plan Of Kedhar Jadhav To Finish The Game For Us🔥👌🏻#KKRvCSK #IPL2020 pic.twitter.com/PXV2QLggXY
— ♦️𝗞!Π𝗚 𝗠∆𝗞€𝗥ᶜˢᵏ♦️ (@Md_Mustafa_01) October 7, 2020
இந்த சமயத்தில் கேதர் ஜாதவ் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் களமிறங்கினர். இதில் கேதர் ஜாதவ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 12 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்களை மட்டுமே எடுத்தார். கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற நிலை இருந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஜாதவ் அருகில் அடித்துவிட்டு ரன் ஏதும் எடுக்காமல் நின்றது அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த பந்தும் ரன் ஏதும் எடுக்காததால் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் தனது பேட்டை மாற்றினார். பின்னர் எத்தனை பீல்டர்கள் நிற்கின்றனர் என எண்ணினார். இதனை ரசிகர்கள் மீம்ஸ்கள் மூலம் கிண்டல் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
