5 வருஷம், 69 போட்டிக்கு பிறகு ‘கொல்கத்தா’ அணி எடுத்த முடிவு.. ஒருவேளை ஜெயிக்குறதுக்கான ‘ப்ளானா’ இருக்குமோ..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13-சீசன் ஐபிஎல் தொடரின் 21-வது லீக் போட்டி இன்று (07.10.2020) அபு தாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3-ல் தோல்வியும், 2-ல் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல் 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது.
இந்தநிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 5 வருடங்களுக்கு பிறகு கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்பின்னர் 69 போட்டிகளுக்கு பிறகு இன்றைய சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#KKRvCSK #KKRvsCSK #CSKvsKKR #CSKvKKR #CSK #KKR #KKRHaiTaiyaar #ChennaiSuperKings #KolkataKnightRiders #Dhoni #DineshKarthik @ChennaiIPL @KKRiders @DRSofficialpage #DRS pic.twitter.com/2e8p7M1aps
— DRS - Daily Recreation Service (@DRSofficialpage) October 7, 2020
BREAKING: The last time before today #KKR opted to bat first after winning the toss was in May 2015 - 69 matches ago.#KKRvCSK #IPL2020
— #IPL2020 #IPL2020 #MIvCSK #MIvKKR #IPL2020 #MIvSRH (@ICCcricInfo_U) October 7, 2020