“பவுலர்ஸ் சிறப்பா பந்து வீசியும்.. இதனாலதான் போச்சு!”.. போட்டி முடிந்ததும் தோனி பேச்சு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று அபுதாயில் நடைபெற்ற ஐபிஎல் 2020-யின் 21வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் சிஎஸ்கே சுருண்டது.
இதில் தினேஷ் கார்த்திக் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் முடிவு எடுத்தார், ராகுல் திரிபாதியை தொடக்க வீரராகக் களமிறக்க, அவர் 51 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார், சுனில் நரைனை மிடில் ஆர்டரில் இறக்க, அவர் 9 பந்துகளில் 17 எடுத்தார்.
12, 14, 16, 19-வது ஓவர்களை வீசிய நரைன், வாட்சனைக் காலி செய்தார். தோனியை சிவி வருண் வெளியேற்றினார். 5 விக்கெட்டுகளையே இழந்திருந்தாலும், 157 ரன்களுக்கே சிஎஸ்கே சுருண்டது.
இந்த மேட்சில் தோனியின் கன்சர்வேட்டிவ் அணுகுமுறை தோல்விக்கு இட்டுச் சென்றதாகக் கூறலாம். கேதார் ஜாதவ்வை முன்னால் இறக்கி பிராவோவை இறக்காமலே விட்டதும், நல்ல ஹிட்டரான ஷர்துல் தாக்கூரை முன்னால் பிஞ்ச் ஹிட்டராக இறக்காமல் இருந்ததும், தினேஷ் கார்த்திக், இயன் மோர்கனின் புதிய உத்திகளும் சிஎஸ்கேவின் இந்த தோல்விக்கு காரணமாகியது எனலாம்.
ஆட்டம் முடிந்து பேசிய தோனி, “168 ரன்களுக்கு அவர்களை மட்டுப்படுத்தி பவுலர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர் அணியின் தோல்விக்கு பேட்ஸ்மென்களே காரணமாயினர். கடைசி சில ஓவர்களில் பவுண்டரிகள் இல்லாதது, பேக்ஃப் லெந்தில் வீசும் போது பவுண்டரிகளை அடிக்கும் வழிவகைகளைக் கண்டறியாதது, பேட்டிங்கில் புதிய முயற்சிகளை செய்யாததுதான் பிரச்சனை. இவற்றை செய்திருக்க வேண்டும்.
பேட்டிங்கில் நன்றாக ஆடி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழக்காமல் இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரி அமைந்திருந்திருக்கும். சாம் கரன் அருமையாக வீசுகிறார்.” என்று பேசினார்.