‘நாளைக்கு மேட்ச்ல விளையாட அவர் வந்தாச்சு...’ ‘என் ஃபேமிலிய விட்டுட்டு இங்க வந்தது அவ்ளோ ஈஸி இல்ல...’ - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் கலக்கம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அசத்தல் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நியூஸிலாந்தில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். அவரை பென் ஸ்டோக்ஸ் கூடவே இருந்து கவனித்து வந்தாா். இதன் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல்கட்ட லீக் ஆட்டங்களில் அவரால் பங்கேற்று விளையாட முடியாமல் போனது.

இந்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். கடந்த வாரத்தின் இறுதியில் வந்த ஸ்டோக்ஸ், மொத்தம் ஆறு நாள்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
தற்போது, ராஜஸ்தான் அணியின் அடுத்த போட்டியில் விளையாட உள்ளார். ஷார்ஜாவில் நடைபெறவுள்ள நாளைய போட்டியில் ராஜஸ்தானும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
இதுகுறித்து ஸ்டோக்ஸ் தெரிவித்தபோது, ‘என் அன்பு தந்தை மற்றும் குடும்பத்தினரிடம் விடை பெற்றுக்கொண்டு இங்கு வந்தது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. எங்கள் குடும்பத்துக்கு இது சிரமமான காலக்கட்டம். இந்த நேரத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக உள்ளோம். அனைவருடைய சம்மதத்துடன் ஐபிஎல் போட்டியில் விளையாட வந்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
