ஓபனிங் இறக்கி விட்டதுக்கு ‘தரமான’ சம்பவம் பண்ணிட்டீங்க.. சிஎஸ்கேவுக்கு ‘தண்ணி’ காட்டிய ‘தனிஒருவன்’ இவர்தான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 167 ரன்களை குவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று (07.10.2020) அபு தாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திருப்பாதி மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
இதில் சுப்மன் கில் 11 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த நிதிஷ் ரானா 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து களமிறங்கிய சுனில் நரேன், ராகுல் திருப்பாதியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். ஆனால் 17 ரன்கள் எடுத்திருந்தபோது கரன் ஷர்மாவின் ஓவரில் கேட்ச் கொடுத்து சுனில் நரேன் அவுட்டானார்.
இதனை அடுத்து களமிறங்கிய ரசல் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இப்படி வரிசையாக விக்கெட் விழுந்து வந்தாலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுல் திருப்பாதி தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வந்தார். அவர் 51 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 81 ரன்கள் அடித்து அசத்தினார். இப்போட்டியில் ராகுல் திருப்பாதியை தவிர மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்களை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
A brilliant contribution by Rahul Triphati today. Should KKR continue with him as an opener?
Image source: Disney+ Hotstar VIP and IPL/BCCI#RahulTripathi #KKRvCSK #IPL2020 #OneCricket pic.twitter.com/x5hQ8TVRGi
— OneCricket (@OneCricketApp) October 7, 2020
மேலும் கடந்த போட்டியில் 8-வது ஆர்டரில் களமிறங்கிய ராகுல் திருப்பாதி இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கொல்கத்தா அணி 167 ரன்களை குவித்தது.