‘ஜெயிக்க வேண்டிய மேட்ச்’.. கடைசி ஓவர்ல கேதர் ஜாதவ் ஏன் ‘அப்டி’ பண்ணாரு..? சரமாரியாக ‘வறுத்தெடுக்கும்’ ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் தொடரின் 21-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திருப்பாதி 51 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதனை அடுத்த பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன் மற்றும் டு ப்ளிசிஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் டு பிளிசிஸ் 17 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த அம்பட்டி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து வாட்சன் அதிரடியாக விளையாடினார். இதில் வாட்சன் 50 ரன்களும், அம்பட்டி ராயுடு 30 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து வந்த கேப்டன் தோனி 11 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து சாம் குர்ரனும் 17 ரன்களில் அவுட்டானர். பரபரப்பான கட்டத்தில் கேதர் ஜாதவ் மற்றும் ஜடேஜா களமிறங்கினர். இதில் ஜடேஜா 8 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார். ஆனால் அடித்து ஆட வேண்டிய சமயத்தில் கேதர் ஜாதவ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இப்போட்டியில் 12 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே கேதர் ஜாதவ் எடுத்திருந்தார். மேலும் கடைசி ஓவரில் 30 ரன்கள் அடித்தால்தான் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி இருந்தது. இந்தநிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட கேதர் ஜாதவ் அருகில் அடித்துவிட்டு ரன் ஏதும் ஓடாமல் நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் கேதர் ஜாதவ்வின் பேட்டிங்கை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Thank u so much Jadhav. Nalla varuvinga
— Sathish (@actorsathish) October 7, 2020
Pls Dhoni.... 10 per kooda podhum
— Sathish (@actorsathish) October 7, 2020
DEI TAKE AWAY JADHAV FROM TEAM. WE ARE DONE. pic.twitter.com/nW6TGKVsZA
— 💮 CSK 💛 💛💛 (@smileys_x) October 7, 2020
Kedar Jadhav is working from home again? #CSKvsKKR
— Trendulkar (@Trendulkar) October 7, 2020