WATCH: ‘யாரு சாமி நீங்க’!.. கேட்ச் பிடிப்பீங்கனு தெரியும் ஆனா ‘இப்டி’ பிடிப்பீங்கனு எதிர்பாக்கல.. வெறித்தனமான வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து அசத்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று அபு தாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திருப்பாதி மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
இதில் சுப்மன் கில் 11 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த நிதிஷ் ரானா 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து களமிறங்கிய சுனில் நரேன், ராகுல் திருப்பாதியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இது சிஎஸ்கே பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
#Narine is out. Fantastic catch by #Jadeja with #Fafduplesis.
Check out the wicket again. #ipl #IPL2020 #Dream11IPL #IPLinUAE @StarSportsIndia #Hotstar #Cricket #India #CSKvsKKR #KKRvCSK pic.twitter.com/tUBiK2YZ5E
— Anil Bhattar (@AnilBhattar2) October 7, 2020
இந்த சமயத்தில் கரன் ஷர்மா வீசிய ஓவரில் சுனில் நரேன் சிக்ஸ் அடிக்க முயன்றார். அப்போது பவுண்டரி லைனில் நின்ற ஜடேஜா டைவ் அடித்து கேட்ச் பிடித்து அதனை டு பிளிசிஸ் கைக்கு வீசினார். இதனால் 17 ரன்களில் சுனில் நரேன் அவுட்டாகினார்.