"'தோனி' ஒரு நல்ல 'ஃபினிஷர்' தான்... ஆனா 'இந்த' விஷயத்தயும் அவரு 'கொஞ்சம்' யோசிக்கணும்..." 'அறிவுரை' சொன்ன 'லாரா'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற போட்டியில், வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை சென்னை அணி தழுவியிருந்த நிலையில், அந்த அணியின் பேட்ஸ்மேன் ஜாதவ் மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் கடும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டனர்.
இறுதியில் பல பந்துகளை வீணடித்த ஜாதவால் சென்னை அணி வெற்றியை கோட்டை விட்டது. நேற்று நான்காவது வீரராக களமிறங்கியும், தோனியால் சரியாக ஆட முடியவில்லை. ஆனால் அதன் பின்னர், ஜடேஜா அல்லது பிராவோ ஆகியோரை களமிறக்காமல் ஜாதவை தோனி களமிறங்க செய்தார். இதனால் தான் போட்டி கொல்கத்தா பக்கம் திரும்பியது. இதன் காரணமாக, தோனி மற்றும் ஜாதவை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அணியின் தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். 'தோனி போன்ற ஒரு சிறந்த கேம் ஃபினிஷர், இப்படி ஆடுவதை நம்ப முடியவில்லை. இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்தே தோனியின் பேட்டிங் புதிராகவே உள்ளது' என்றார்.
மேலும், 'தோனி ஒரு சிறந்த வீரர் தான். அதில் எதுவும் சந்தேகமில்லை. ஆனால், இப்போது அதற்கான சூழ்நிலை அமையவில்லை. போட்டியை சிறந்த முறையில் முடித்து வைக்க தன்னைத் தவிர வேறு சில வீரர்களையும் அவர் பார்க்க வேண்டும். ஆல் ரவுண்டர் பிராவோ ஒரு சிறந்த வீரர். ஆனால் அவருக்கு போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜடேஜா கூட ஒரு சிறந்த ஃபினிஷர் போன்று தான் நேற்று ஆடினார்.
ஆனால், அப்படிப்பட்ட ஒரு கடினமான சூழலில் அவரால் என்ன செய்ய முடியும்?. முதல் 10 ஓவரில் 90 ரன்கள் அடித்து விட்டு அடுத்த 10 ஓவர்களில் ரன் அடிக்காமல் தோல்வி பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை' என லாரா தெரிவித்துள்ளார்.