“ரெய்னா இல்லனா.. பேட்ஸ்மேன்கள் இல்லயா?”.. “ஜடேஜா ஆடாதது தோனியின் முடிவு!”.. “ஜாதவை களமிறக்க இதுதான் காரணம்!”.. பயிற்சியாளர் பிளமிங்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Oct 08, 2020 01:29 PM

சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு நன்றாக விளையாடுவார் என்று நம்பிதான், ஜடேஜா மற்றும் பிராவோவுக்கு முன்னதாகவே கேதார் ஜாதவை களமிறக்கியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.

IPL2020:ahead of Jadeja Jadhav was sent CSK Coach Fleming Over CSKvKKR

அபுதாபியில் நடந்த நேற்றைய ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 168 எனும் இலக்குடன் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோற்றது.  இந்த் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் இறங்கிய கேதார் ஜாதவ் 12 பந்துகளில் 7 ரன்களே எடுத்தார். என்னதான் தோல்விக்கு மற்ற பேட்ஸ்மேன்களும் காரணமாக இருந்தாலும், ரன்கள் தேவைப்பட்ட இடத்தில் ஷாட்களை ஜாதவ் அடித்து ஆடாததால், ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் ஜாதவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

IPL2020:ahead of Jadeja Jadhav was sent CSK Coach Fleming Over CSKvKKR

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், “சுழற்பந்துவீச்சை திறமையாகக் கையாண்டு கேதார் ஜாதவ் நன்றாக விளையாடக் கூடியவர் என்பதால்தான், ஜடேஜா மற்றும் பிராவோவுக்கு முன்பாக ஜாதவை களமிறக்கினோம். அதன் பின் ஜடேஜா களமிறங்கி ஆட்டத்தை முடித்து வைப்பார் என்று நினைத்தோம். ஆனால் கடுமையாகப் முயற்சித்தும் போதுமான ரன்கள் இல்லாததால் தோல்வி அடைந்தோம்.

IPL2020:ahead of Jadeja Jadhav was sent CSK Coach Fleming Over CSKvKKR

அம்பதி ராயுடு,வாட்ஸன் ஆட்டமிழந்தது, 11-வது ஓவர் முதல் 14-வது ஓவர் வரை 14 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே சேர்த்தது உள்ளிட்டவற்றால் பேட்டிங்கை குறை கூறமுடியாது. பார்ட்னர்ஷிப்பில் ஆடியவர்கள் யாரேனும் 75 ரன்களுக்கு மேல் அடித்திருந்தாலே, அடுத்த 5 ஓவர்களுக்கும் அப்படி பாட்னர்ஷிப் அமைத்திருக்கும், ஆட்டமும் வேறு திசையில் பயணித்திருக்கும்.

IPL2020:ahead of Jadeja Jadhav was sent CSK Coach Fleming Over CSKvKKR

கொல்கத்தா அணியினர் கொடுத்த தொடர் அழுத்தம் முக்கியக் காரணம். ரெய்னா இல்லை என்பதற்காக பேட்டிங் வலுவிழந்ததாக கூற முடியாது. நல்ல பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள், ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஆதலால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என நான் கருதவில்லை. கேதார் ஜாதவ் நன்கு அடித்து ஆட பந்துகள் நிறையவே இருந்தன.  ஆனால் பலனளிக்கவில்லை. ஜடேஜாவுக்கு ஓவர் வழங்காதது பற்றி தோனியிடம்தான் கேட்கவேண்டும். களத்தில் தோனிதான் முடிவு எடுப்பார்” இவ்வாறு பிளெமிங் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2020:ahead of Jadeja Jadhav was sent CSK Coach Fleming Over CSKvKKR | Sports News.