"என்னது, அவரா...??? சீசனிலிருந்தே விலகுகிறாரா???" எதிர்பார்ப்பை கிளப்பிய பிரபல வீரர்... IPL-லிருந்து திடீர் விலகல்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 13வது சீசனிலிருந்து அடுத்தடுத்து வீரர்கள் பலரும் காயம் காரணமாக வெளியேறி வருவது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் கேகேஆர் அணி இன்றைய போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே விலகிய கேகேஆர் அணி வீரர் ஹாரி கர்னிக்கு பதிலாக அலி கான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஐபிஎல்லில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்ற அலி கான் மீது ரசிகர்களிடையேயும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் ஒரு போட்டியில் கூட இதுவரை விளையாடாத அலி கான் காயம் காரணமாக இந்த சீசனிலிருந்தே விலகியுள்ளார். காயம் காரணமாக அலி கான் இந்தாண்டு தொடரிலிருந்தே விலகுவதாக அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கிரிக்கெட் வீரரான அலி கான் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து, 18 வயதில் அமெரிக்கா சென்று கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை ஒரேயொரு சர்வதேச போட்டியில் விளையாடியுள்ள அலி கான், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், கனடா க்ளோபல் டி20 லீக், அபுதாபி டி10 லீக், வங்கதேச பிரீமியர் லீக் போன்ற பல்வேறு தொடர்களில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.