அவர் உள்ளே, இவர் வெளியே.. சிஎஸ்கே ‘ப்ளேயிங் லெவனில்’ ஒரு மாற்றம்..! யாருன்னு தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று அபு தாபி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடரின் 21-வது லீக் போட்டி இன்று (07.10.2020) அபு தாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3-ல் தோல்வியும், 2-ல் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல் 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது.
இந்தநிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இப்போட்டியில் சென்னையில் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ப்யூஸ் சாவ்லாவுக்கு பதிலாக கரன் ஷர்மா ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார். கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதுமில்லை.
KKR, Karn Taiyaar! Piyush makes way for Kalakkal Karn. 🦁💛 #WhistlePodu #WhistleFromHome #Yellove #KKRvCSK pic.twitter.com/oMCCeFc7bN
— Chennai Super Kings (@ChennaiIPL) October 7, 2020
A look at the Playing XI for #KKRvCSK #Dream11IPL pic.twitter.com/E6ewcGTtQo
— IndianPremierLeague (@IPL) October 7, 2020

மற்ற செய்திகள்
