கொலை மிரட்டல் விடுத்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் மீது புகார்..! கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 06, 2019 03:44 PM
இந்திய அணியின் முன்னாள் வீரர் முனாஃப் பட்டேல் கொலை விடுத்ததாக வதோதரா கிரிக்கெட் சங்கத் தலைவர் புகார் அளித்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் பட்டேல். இவர் இந்திய அணியின் சார்பாக 13 டெஸ்ட் போட்டிகள், 70 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது குஜராத் மாநிலம் வதோதரா கிரிக்கெட் சங்கத்தில் ஆலோசகராக இருந்து வருகிறார். இந்நிலையில் வதோதரா கிரிக்கெட் சங்கத் தலைவர் தேவேந்திர ஸ்ருதி என்பவர், தனக்கு முனாஃப் பட்டேல் கொலை மிரட்டல் விடுத்தாக புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை மறுத்த முனாஃப் பட்டேல், ‘தேர்வுக் குழுவில் அவருக்கு பிரச்சனை உள்ளது. நான் அணியின் ஆலோசகர்தான். மற்றபடி எனக்கும் சங்கத்துக்கும் தொடர்பில்லை. என் பெயர் தேவை இல்லாமல் இழுக்கப்பட்டுள்ளது. என் மீதான புகார் ஆதாரமற்றது’ என தெரிவித்துள்ளார். ஆனால், ‘சங்கத்தின் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதால், தனக்கு கொலைமிரட்டல் விடுப்பதாகவும், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு முனாஃப் பட்டேல் தான் காரணம்’ என தேவேந்திர ஸ்ருதி தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
