‘இதனாலதான், ரோகித் சர்மாவை’... ‘டெஸ்ட் அணியில் சேர்க்கல’... ‘விராட் கோலி விளக்கம்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 28, 2019 11:47 AM
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மா நீக்கப்பட்டது குறித்து விராட் கோலி தற்போது விளக்கமளித்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ததில், பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கின. குறிப்பாக இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் சேர்க்கப்படாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முன்னாள் வீரர்களான, கங்குலி, அசாருதீன், சேவாக், சோயிப் அக்தர் என பலர் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது கேப்டன் கோலி, இந்திய அணியின் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘ரோகித் சர்மா திறமையான வீரர் தான். இருப்பினும் விகாரி ஒரு நடுவரிசை ஆட்டக்காரர். மேலும் அணிக்கு தேவையான பொழுது அவர் பந்துவீசவும் செய்வார். ஆகவேதான் அவரை ஒரு ஆல்ரவுண்டர் முறையில் நாங்கள் அணியில் தேர்வு செய்தோம். மேலும் அணித்தேர்வு சார்பில் இதுபோல விமர்சனங்கள் எழுவது சகஜம் தான். அணியின் நலனுக்காக எது முக்கியமோ அதை செய்திருக்கிறோம்.
மேலும் கேப்டனாக நான் சில முடிவுகள் எடுக்கிறேன். அதில் வெற்றி முடிவுகள் என் கையில் மட்டுமல்ல விளையாடும் அனைத்து வீரர்களையும் கையிலும் உள்ளது. அனைத்து வீரர்களின் பங்களிப்பும் ஒரு வெற்றிக்கு மிகவும் முக்கியம்’ என்று கோலி கூறியுள்ளார். இதற்கு முன்னதாக உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு விராட் கோலி மறுப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
