'என்னோட நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்ட'...'தலைமறைவான மனைவி'... 'இவருக்கே இந்த கதியா'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jul 04, 2019 01:55 PM

குழந்தைகளுடன் மனைவி தலைமறைவானதால் விரக்தி அடைந்த துபாய் மன்னர், ஆக்ரோஷ கவிதைகளை எழுதி வருகிறார்.

Dubai ruler\'s wife flees to Europe, he writes her a furious poem

துபாய் மன்னர், ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்டோம். இவர் ஜோர்டான் மன்னரின் சகோதரியான இளவரசி ஹயா பின்ட் அல் ஹூசைனை ஆறாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜலிலா, சையத் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் கடந்த சில மாதங்களாகவே  கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதையடுத்து இளவரசி ஹயா, மன்னர், ஷேக் முகமதுவிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார்.

இதனிடையே இதுதொடர்பான பிரச்சனை நடந்து கொண்டிருந்த போதே இளவரசி ஹயா தலைமறைவாகி ஜெர்மன் நாட்டில் தஞ்சம் கோரினார். ஆனால் அந்நாடு அவருக்கு அடைக்கலம் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது குழந்தைகளுடன் 31 மில்லியன் பவுண்டுகளையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டதாகவும், அவர் தப்பிக்க, ஜெர்மன் அதிகாரிகள் உதவியதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு  ஏற்படுத்தியது.

இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால், விரக்தி அடைந்துள்ள மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்டோம் ஆக்ரோஷமான கவிதைகள் மூலம் தனது கோபத்தை வெளிக்காட்டி வருகிறார். அதோடு அந்த கவிதைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அவருடைய பதிவில் ''நீ நம்பிக்கைத் துரோகி, விலைமதிப்பற்ற நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டாய். உனது ஆட்டம் வெளியே தெரிந்துவிட்டது. நாம் யாராக இருந்தோம், நீ யாராக இருந்தாய் என்பது முக்கியமல்ல, நீ பொய் சொன்ன நாட்கள் முடிந்துவிட்டன’’என்று தெரிவித்துள்ளார். மற்றொரு கவிதையில், ''அன்பே, இன்னும் அதிகம் சொல்ல ஏதுமில்லை. உன் மரண அமைதி என்னைத் துன்புறுத்துகிறது’’ என்றும் மற்றொரு கவிதையில், ’’இனி உனக்கு என்னிதயத்தில் இடமில்லை’’ என்றும் ‘’நீ வாழ்ந்தாலும் இறந்தாலும் எனக்கு கவலை இல்லை’’ என்று மற்றொரு கவிதையிலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #DUBAI #FURIOUS POEM #SHEIKH MOHAMMED BIN RASHID AL MAKTOUM #HAYA BINT AL HUSSEIN