‘திடீர் ஓய்வு முடிவை எடுத்த பிரபல இந்திய வீரர்’.. உலகக்கோப்பை விரக்தியால் எடுத்த முடிவா? அதிர்ச்சியில் இந்திய அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 03, 2019 02:17 PM

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணி வீரர் அம்பட்டி ராயுடு ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ambati Rayudu announces retirement from all forms of cricket

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான அம்பட்டி ராயுடு, இதுவரை 55 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 10 அரைசதங்கள் அடித்துள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடியுள்ளார்.

இதனை அடுத்து நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் இந்திய அணியின் சார்பாக விளையாட அம்பட்டி ராயுடு எடுக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் பட்டியலில் அம்பட்டி ராயுடுவின் பெயர் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனது ஆதங்கத்தை அம்பட்டி ராயுடு அப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் அவருக்குப் பதிலாக அம்பட்டி ராயுடு அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு இளம் வீரர் ரிஷப் பண்டிற்கு சென்றது. இதனால் விரக்தியடைந்த அம்பட்டி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #BCCI #ICC #AMBATIRAYUDU