‘செமி ஃபைனலுக்கு முன்னேறியதால் அடுத்த போட்டியில் ஓய்வா..?’ வெற்றிக்குப் பிறகு பேசியுள்ள இந்திய வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 03, 2019 02:54 PM

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

World cup IND vs BANG Jasprit Bumrahs post match interview

‘யாக்கர் ஸ்பெஷலிஸ்ட்’ என அழைக்கப்படும் ஜஸ்ப்ரித் பும்ரா வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில் இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில் பும்ரா ஓய்வு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், “இதுவே என்னுடைய முதல் உலகக் கோப்பை தொடர். அதனால் எவ்வளவு போட்டிகளில் விளையாட முடியுமோ அனைத்திலும் விளையாடவே விரும்புகிறேன். சில போட்டிகளில் விளையாட மாட்டேன் எனக் கூறும் அளவுக்கு நான் இன்னும் அனுபவம் வாய்ந்த வீரராக வளரவில்லை என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவருடைய யாக்கர் பந்துவீச்சின் ரகசியம் பற்றிய கேள்விக்கு, “எல்லாமே நாம் தயார் படுத்திக்கொள்வதில்தான் உள்ளது. நான் பயிற்சியின்போது திரும்பத் திரும்ப முயற்சிக்கிறேன். அதிகமாக பயிற்சி செய்யச் செய்ய உங்களுக்கு ஓரளவுக்கு நன்றாக வரும். நீங்கள் அதை முழுமையாகக் கற்றுவிட முடியாது. ஆனால் முன்பை விட சிறப்பாக வீச முயற்சிக்க முடியும். திரும்பத் திரும்ப பயிற்சி செய்து போட்டியில் முயற்சிக்க வேண்டியதுதான்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSSL #TEAMINDIA #JASPRITBUMRAH