‘கோலி தான் ஹீரோன்னா அவர மாதிரி விளையாடக் கத்துக்கோங்க..’ பாகிஸ்தான் வீரருக்கு அறிவுரை சொன்ன முன்னாள் வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 24, 2019 04:39 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.

இந்திய அணியுடனான தோல்விக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் ஆசம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ரோல் மாடலாக வைத்து விளையாடி வருகிறார். இதை பாபர் ஆசம் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் வெற்றி பற்றிப் பேசியுள்ள முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர், “நான் பாபர் ஆசமிடம் ஒரு விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைப் பிடிக்கும். அவரை ரோல் மாடலாக வைத்திருக்கிறீர்கள் என்றால் அவரைப் போல் விளையாடக் கற்றுக் கொள்ளுங்கள். அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ள போது விராட் கோலியைப் போல் அதிகமாக ஒரு ரன்கள், இரண்டு ரன்கள் ஓடுவதைக் கற்றுத் திறமையை மெருகேற்ற வேண்டும்.
விராட் கோலி, ரோஹித் சர்மா, கேன் வில்லியம்ஸ் உள்ளிட்ட வீரர்களைப் பார்த்தால் 50 ரன்கள் அடித்த பின் அவர்கள் ஆட்டத்தில் ஆக்ரோஷம் இருக்கும். அதன்பின் ரன்களை வேகமாகச் சேர்ப்பார்கள். இதை பாபர் ஆசம் கற்க வேண்டும். என்னைக் கேட்டால் ஹாரிஸ் சோஹைல் பாபர் ஆசத்தை விட சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் வீரர். அதேசமயம் ஷோயிப் மாலிக்கை நீக்கியது சரியான முடிவு. இதேபோல பதற்றத்தை விடுத்து போட்டியை எளிதாக அணுகினால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது” எனக் கூறியுள்ளார்.
