‘அவமானத்தின் விளிம்புக்கே வந்துட்டோம்..’ ரசிகர்களுக்கு விமர்சிக்க உரிமை இருக்கு.. வேதனையில் பேசிய கேப்டன்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 24, 2019 01:09 PM

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான் அணி.

Captain Faf du Plessis embarrassed by South Africa exit

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி தோல்வியடைந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு அறையிறுதிக்குத் தகுதி பெறாமல் தென் ஆப்பிரிக்க அணி வெளியேறுவது இதுவே முதல்முறையாகும். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தானை மட்டும் வென்று 3 புள்ளிகளுடன் உள்ளது.

இந்தத் தோல்வி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் டூப்பிளசிஸ், “நாங்கள் பொறுப்புணர்வோடு விளையாடவில்லை என்பதையே  இந்த முடிவு காட்டுகிறது. இப்படியே செல்வது மிகக்கடினம். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் விளையாடிய விதம் எங்களை அவமானத்தின் விளிம்பிற்கே கொண்டுவந்துவிட்டது.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில், தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் இதுபோல குறைந்த புள்ளிகளுடன் வெளியேறுவது அவமானமாக இருக்கிறது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். நாங்கள் சரியாக விளையாடாததால் எங்களை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உள்ளது” என வேதனையுடன் கூறியுள்ளார். இதற்கிடையே உலகக் கோப்பை முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்க அணியின் மூத்த வீரர்கள் இம்ரான் தாஹிர், டுமினி, ஸ்டெயின் ஆகியோர் ஓய்வை அறிவிக்கப்போவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #SAVSPAK