‘தோனியின் பேட்டிங்கில் அதிருப்தி'... 'வறுத்தெடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 23, 2019 03:22 PM

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் தோனி - கேதர் ஜாதவ் ஆடிய விதம் ஏமாற்றத்தை அளித்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Sachin Tendulkar Disappointed by Dhoni-Jadhav Approach

உலகக் கோப்பை தொடரில் இந்திய- ஆப்கானிஸ்தான் அணிகள் கடந்த சனிக்கிழமையன்று மோதின. இதில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற்றது. இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 'இந்தப் போட்டி தனக்கு திருப்திகரமாக இல்லை. குறிப்பாக தோனி, ஜாதவ் ஜோடி ஆட்டமுறை திருப்திகரமாக இல்லை. அவர்கள் ரன்குவிப்பு ஆமை வேகத்தில் இருந்தது. தோனி சிறப்பான ஆட்டத்தை  வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இதில் நேர்மறை ஆட்டம் தென்படவே இல்லை.

34 ஓவர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு, வெறும் 119 ரன்கள் தான் எடுத்துள்ளோம். 38-வது ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்த பின்பு, ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தது 2 முதல் 3 பந்துகளில் நாம் ரன்கள் எடுக்க தவறிவிட்டோம்' என்று தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் தோனி-ஜாதவ் ஜோடி 84 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தது. இதில், தோனி 36 பந்துகளில் 24 ரன்களும், ஜாதவ் 48 பந்துகளில், 31 ரன்களும் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.