'பிரிட்ஜ்ல 3 பீசா துண்டுகள் இருக்கு'.. நீங்க என் அம்மாவாக இருந்தால், உண்மையிலே என் மேல பாசம் இருந்தா'.. அதிகாலை 4 மணிக்கு மகள் அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்!.. 'தலைசுத்தி' நின்ற தாய்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 10, 2020 10:10 AM

ஒரு பெண் தனது தாய்க்கு அனுப்பிய WhatsApp ஸ்கிரீன் ஷாட் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதன்படி, அதிகாலை 4 மணிக்கு எழுந்த மகள் ஒருவர், தனது சகோதரி தான் தூங்கிய பின்பு அதிகாலையில் எழுந்து, முதல் நாள் இரவு குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் மூன்று பீஸ்ஸா ஸ்லைஸ்களை சாப்பிட்டு விடுவார் என்று கவலைப்படுவதுதான் அந்த சாட்டிங்கில் உள்ளது.

girl texts mom by 4am to not let sister take pizza from fridge

"இப்படி ஒரு சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதிலிருந்து" தனது சகோதரியை தடுக்க, சிறுமி ஒருவர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தன் அம்மாவுக்கு வாட்ஸ்-ஆப்பில் செய்தி அனுப்பியிருக்கிறார்.  “அம்மா நான் தற்செயலாக எழுந்துவிட்டேன். இப்போது அதிகாலை 4 மணி.  மீண்டும் தூங்கிய பின்னர் நான் இன்று காலையில் எந்த நேரத்தில் எழப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பியு(சகோதரி) எனக்கு முன் எழுந்தால் அவள் என் நிலைமையைப் பயன்படுத்திக் கொள்வாள் என்று எனக்குத் தெரியும்.

ஃப்ரிட்ஜில் 3 பீசா துண்டுகள் இருக்கிறது. பியு இதையெல்லாம் சாப்பிட வேண்டாம். அவள் சாப்பிடத் தொடங்குவதற்கு முன், அவளிடம் என் அனுமதியைப் பெறச் சொல்லுங்கள். நீங்கள் என் அம்மாவாக இருந்தால், நீங்கள் எப்போதாவது என்னை நேசித்திருந்தால், நீங்கள் என்னை அன்பாகப் பெற்றிருந்தால், என் மனநிலையை அறிந்து நீங்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நன்றி அம்மா, குட்நைட்” என்று அனுப்பியிருக்கிறாள். இதையெல்லாம் படித்த பின் அந்த அம்மாவின் ஒருவரி ரியாக்‌ஷன் இதுதான் - "ஏய் பகவான்!".

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Girl texts mom by 4am to not let sister take pizza from fridge | India News.