‘உங்க வேதனை புரியுது, எனக்கும் இப்டிதான் நடந்தது’.. ராயுடு 3டி க்ளாஸ் சர்ச்சைக்கு பிரபல வீரர் ஆதரவு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 19, 2019 05:21 PM

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அம்பட்டி ராயுடு இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ப்ரக்யான் ஓஜா டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Ojha posts cryptic tweet on Rayudu\'s exclusion from world cup 2019

ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடர் வரும் மே மாதம் 30 -ம் தேதி முதல் இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதற்காக விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் அம்பட்டி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடம் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில் அம்பட்டி ராயுடுவிற்கு இடம் கிடைக்காதது குறித்து பேசிய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்,‘நான்காவது இடத்துக்கு நிறைய வீரர்களை முயற்சித்து பார்த்ததில், விஜய் சங்கர் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என முப்பரிமாணங்களிலும்(3டி) சிறப்பாக செயல்படுவதால் அவரை தேர்வு செய்தோம்’ என அவர் கூறியிருந்தார்.

இதனை அடுத்து அம்பட்டி ராயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘உலகக் கோப்பையை பார்க்க 3டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளேன்’ என எம்.எஸ்.கே.பிரசாத்தை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுருந்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ராயுடுவுற்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரக்யான் ஓஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,‘ஹைதராபாத் வீரர்களுக்கு எப்போது இதே மாதிரிதான் நடக்கிறது. நானும் இது போன்ற தருணத்தை சந்தித்து இருந்திருக்கிறேன். அதனால் உங்களின் வேதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’ என அவர் பதிவிட்டிருந்தார்.

ஹைதராபாத்தை சேர்ந்த ப்ரக்யான் ஓஜா இந்திய அணிக்காக 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #AMBATIRAYUDU #WOLRDCUP2019