'அடுத்த 2 நாள் பத்திரமா இருந்துக்கோங்க'... வானிலை மையம் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jun 18, 2019 02:42 PM
வட தமிழகம் உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பம் அதிகரித்துக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகம் பதிவாகக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அனல் காற்றும் வீச வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அடுத்த இரண்டு தினங்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் மேல் பதிவானது குறிப்பிடத்தக்கது.
