கபடி மேட்சுக்கு நடுவே கேட்ட துப்பாக்கி சத்தம்.. பிரபல இந்திய வீரருக்கு நேர்ந்த சோகம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவை சேர்ந்த பிரபல கபடி வீரரான சந்தீப் சிங் நங்கல் ஆம்பியனை நேற்று மர்ம கும்பல் ஒன்று சுட்டதில் அவர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
கபடி வீரர்
இந்தியாவின் பிரபல கபடி வீரரான சந்தீப் சிங் நங்கல் ஆம்பியன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கபடி போட்டிகளில் விளையாடி வந்தார். இந்தியா மட்டும் அல்லாது கனடா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார். 40 வயதான ஆம்பியன் கபடி கூட்டமைப்பு ஒன்றையும் நிர்வகித்து வந்தார்.
கபடி மேட்ச்
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாலியன் கிராமத்தில் நேற்று கபடி போட்டி ஒன்று நடந்தது. அப்போது, போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று ஆம்பியனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்று இருக்கிறது.
இந்த துப்பாக்கி தாக்குதலினால் சரிந்து விழுந்த ஆம்பியனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள் அங்கு இருந்தவர்கள். ஆனால், ஆம்பியன் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
20 குண்டுகள்
கபடி போட்டிக்கு நடுவே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆம்பியனின் உடலில் 20 க்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் பிரபல கபடி வீரரான சந்தீப் சிங் நங்கல் ஆம்பியன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது பஞ்சாப் மாநிலத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஆரம்பியனின் மறைவிற்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
"சண்டைக்கு தயாரா?"... ரஷ்ய அதிபர் புதினுடன் நேருக்கு நேர் சவால் .. வைரலாகும் எலான் மஸ்க் ட்வீட்..!