‘அப்படியே’ என்னைப் பார்த்த மாதிரியே இருக்கு... ‘பாராட்டி’ தள்ளிய ‘சச்சின்’... ‘அலட்சியப்படுத்திய’ பிரபல வீரர்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசச்சின் ஆஸ்திரேலிய வீரர் லபுஷேனை புகழ்ந்து பேசியதை ஸ்டீவ் வாஹ் அலட்சியப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான லபுஷேனை புகழ்ந்து பேசினார். லபுஷேனின் பேட்டிங் தன்னுடைய ஆட்டத்தை நினைவுபடுத்தும்படி உள்ளதாக சச்சின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ், லபுஷேன் குறித்த சச்சினின் கருத்தை அலட்சியப்படுத்துவது போல் பேசியுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள ஸ்டீவ் வாஹ், “லபுஷேனின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தணிப்பதற்காக சச்சின் அப்படி கூறியிருப்பார் என நினைக்கிறேன். அவர் கூறியது போல லபுஷேன் ஆட்டம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் சச்சினுக்கு அப்படி கூற உரிமை இருக்கிறது. லபுஷேனின் பொறுமை அல்லது அவர் எப்படி தன் பேட்டிங்கைக் கொண்டு செல்கிறார் என்பது குறித்து சச்சின் அப்படி கூறியிருக்கலாம்.
மேலும் லபுஷேனிடம் ரன்னுக்கான பசி இருக்கிறது. அவர் மிகவும் கடினமாக முயற்சிக்கிறார். ஆஷஸ் தொடரில் அவர் விளையாடிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. வித்தியாசத்தை ஏற்படுத்த விரும்பும் லபுஷேன், நன்றாக ஆடும் அடுத்த வீரர் தானாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறார். 12 மாதங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் டாப் 26 வீரர்களுள் ஒருவராக இருந்தவர் இன்று டெஸ்ட் தரவரிசையில் 4ஆம் இடத்தில் இருக்கிறார் என்றால் இது வியப்பை ஏற்படுத்தும் மாற்றமே” எனத் தெரிவித்துள்ளார்.