சச்சின் பகிர்ந்த ஃபோட்டோ.. "இத விட கிரிக்கெட் FANS-அ குஷிப்படுத்தும் ஃபோட்டோ காட்டுறவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்"..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட எட்டு நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
மேலும், அனைத்து அணிகளின் பெயர்களுடனும் லெஜண்ட்ஸ் என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். உதாரணத்திற்கு இந்திய அணி என்றால், இந்தியா லெஜண்ட்ஸ் என பெயர் இருக்கும். அதே போல, 20 ஓவர் போட்டியாகவும் இது நடைபெற்று வருகிறது.
கடந்த முறை நடைபெற்ற சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தது.
தற்போது நடைபெற்று வரும் தொடரில், தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியை முதல் போட்டியில் இந்திய அணி வீழ்த்தி இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா மோத இருந்த போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.
இந்திய அணியை சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்கி வரும் நிலையில், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், பத்ரிநாத் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தங்களின் அடுத்த போட்டியில், நியூசிலாந்து லெஜண்ட்ஸ் அணியை இந்திய லெஜண்ட்ஸ் அணி, செப்டம்பர் 19 ஆம் தேதியன்று சந்திக்க உள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கு மத்தியில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று, இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது. பல நாட்டு வீரர்கள் ஒரே விமானத்தில் சேர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளனர். சச்சின், யுவராஜ், ஷேன் வாட்சன், பிரெட் லீ, ஷேன் பாண்ட் என எக்கச்சக்கமான நட்சத்திர வீரர்கள் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
பல கிரிக்கெட் ஆளுமைகளை உள்ளடக்கிய இந்த புகைப்படத்தை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர் தனது கேப்ஷனில், "இந்த புகைப்படத்தில் எத்தனை சர்வதேச ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் இருக்கிறது என்பதை உங்களால் சொல்ல முடியுமா?" என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். இதற்கு காரணம், அந்த விமானத்தில் இருக்கும் அனைவரும் தாங்கள் ஆடிய காலத்தில் சிறப்பான வீரர்களாக வலம் வந்தவர்கள்.
இப்படி பல சர்வதேச கிரிக்கெட் லெஜண்ட்டுகளை ஒரே இடத்தில் பார்க்க முடிந்தததால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இதை விட கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஃபோட்டோவை காட்டும் ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்டே கொடுக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.